சீனா- இலங்கை விமான சேவைகளை அதிகரித்தது சீனா

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைள் அதிகரிக்கபட்டுள்ளன. அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது. இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் (Qi Zhenhong) கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதற்க்கான ஆவணத்தை கையளித்தார்

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சீன தூதுவர், ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்ட அதேவேளை, சீன ஜனாதிபதி (Xi Jinping) ஜி ஜின்பிங் அவர்கள் அனுப்பிய விசேடசெய்தியை, தூதுவர் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இந்நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நட்பு நாடாக சீனா வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டியதாகவும் மேலும் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா- இலங்கை விமான சேவைகளை அதிகரித்தது சீனா
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version