ஹிருனிகாவை இழிவுபடுத்தும் படங்களை பகிர வேண்டாம்-பிரதமர்

நேற்று(23.06) பிரதமர் ரணில் விக்ரமசிங்க வீட்டின் முன்னதாக ஐக்கிய மகளிர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு அதன் தலைவி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

அந்த போராட்டத்தில் பொலிசாருடனான இழுபறியின் போது ஹிருனிகாவின் சேலை முந்தானை விலகிய வேளையில் எடுக்கபட்ட புகைப்படம் மற்றும், பெண் பொலிசார் அவரை முன்னேற விடாமல் தடுக்கும் போது மார்பகங்கள் அழுத்தப்படும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் தாய்மையை கேவலப்படுத்த வேண்டாமெனவும், அவ்வாறான சமூகத்தை சேர்ந்தவர்கள் நாமல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“ஹிருணிகா எனது வீட்டுக்கு முன்னாள் வந்தது அரசியல். அதனை வேறு விதமாக பார்க்க வேண்டும். அவர் மூன்று பிள்ளைகளின் தாய். ஒரு தாய்க்கான மரியாதையினை நாம் வழங்கவேண்டும்” எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். “எல்லாவற்றுக்கும் மேலாக தாயானவள் போற்றப்படவேண்டும்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஹிருனிகாவை இழிவுபடுத்தும் படங்களை பகிர வேண்டாம்-பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version