இந்தியாவின் உயர்மட்ட விசேட குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று(23.03) காலையில் விசேட விமானம் மூலம் இந்த குழு வருகை தந்துள்ளது.
இந்திய வெளியுறவு செயலாளர் வினை க்வாற்றா, மற்றும் பொருளாதரா செயற்பாட்டுத்துறை செயலாளர் அஜய் சேத், பொருளாதர சிரேஷ்ட ஆலோசகர் ஆனந்தா யோகேஸ்வரன் ஆகியோர் இந்த குழுவில் வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இவர்கள் சந்திக்கவுள்ளார்கள். இலங்கையின் பொருளாதர நிலைமைகள் தொடர்பில் ஆராயவே இவர்கள் இலங்கை வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இவர்களது திடீர் வருகை, மற்றும் வேகமான சுற்றுலா முக்கிய விடயங்களை செயற்படுத்தவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இந்தியா அண்மைக்காலமாக இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில் கூட்ட தொடர்களை நடாத்தி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் இந்த அவசர அதிவேக விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
வருகை தந்துள்ள இந்த விசேட குழு சந்திப்புக்களை நிறைவு செய்து கொண்டு உடனடியாக நாடு திரும்பவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
