மின்சார சபை தலைவரின் சர்ச்சை – கோப் குழு மக்களுக்கு மறைப்பதாக குற்றச்சாட்டு

கடந்த கோப் குழு கூட்டத்தில் மின்சார சபையின் தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஊடகங்களுக்கு வழங்காது தடை செய்ததை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது போன்ற தகவல்களை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு வழங்காமல் தடை செய்யும் அதிகாரம் கோப் குழுவுக்கோ அல்லது அதன் தலைவருக்கோ கிடையாது எனவும், அந்தத் தகவலை அறிய பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உண்டு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (24.06) தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் மின்சாரத்துறை சார்ந்து, இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பேர்டினாந்து மூலம் கோப் குழு முன்னிலையில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை எனவும், உணர்ச்சிகரமான காரணங்கள் அதில் உள்ளன எனவும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்த கருத்துக்கு தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்துள் சஜித்

அந்தத் தகவல்களை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உண்டு எனவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அண்மைக்காலமாக பல்தேசிய நிறுவனங்களுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளமை இந்த தகவல்களை மறைப்பதன் மூலம் வெளிப்படுகிறது என கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மின்சார சபை தலைவரின் சர்ச்சை - கோப் குழு மக்களுக்கு மறைப்பதாக குற்றச்சாட்டு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version