இலங்கைக்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை அணி இன்று இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணி மூன்று 20-20 போட்டிகள், ஐந்து ஒரு நாள் சர்வரதேசப் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடருக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
20-20 தொடரில் அவுஸ்திரேலியா அணி 2-1 எனவும், ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடரில் இலங்கை அணி 3-2 எனவும் வெற்றி பெற்றுள்ளன. டெஸ்ட் தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
பங்களாதேஷ் தொடரில் விளையாடியிருக்காத பத்தும் நிஸ்ஸங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாடுவார் என நம்பப்படுகிறது. உபாதை காரணமாக பங்களாதேஷ் தொடரில் இடம் பிடித்திருக்காத ஜெப்ரி வன்டர்செய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் தொடரில் அறிமுகம் பெற்று சிறப்பாக பந்துவீசிய டுனித் வெல்லாலகே மேலதிக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற தொடரில் விளையாடிய அநேகமான வீரர்கள் அணியில் தொடர்கின்றனர்.
01) திமுத் கருணாரத்ன – தலைவர்.
02) பத்தும் நிஸ்ஸங்க
03) ஓஷத பெர்னாண்டோ
04) அஞ்சலோ மத்தியூஸ்
05) குசல் மென்டிஸ்
06) தனஞ்சய டி சில்வா
07) கமிந்து மென்டிஸ்
08) நிரோஷன் டிக்வெல்ல (வி.கா)
09) தினேஷ் சந்திமால் (வி.கா)
10) ரமேஷ் மென்டிஸ்
11) சாமிக்க கருணாரட்ன
12) கசூன் ராஜித
13) விஷ்வ பெர்னாண்டோ
14) அசித்த பெர்னாண்டோ
15) டில்ஷான் மதுஷங்க
16) பிரவீன் ஜெயவிக்ரம
17) லசித் எம்புல்தெனிய
18) ஜெஃப்ரி வாண்டர்சே
மேலதிக வீரர்கள்
துனித் வெல்லாலகே
லக்ஷித ரசாஞ்சன