ஜூலை 10 ஆம் திகதி வரை நாடு மூடப்படும் நிலைக்கு ஒப்பான நிலைக்கு செல்லவுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடப்படுவதாகவும், ஏற்கனவே கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டது போன்று பாடசாலைகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டமும் அமுல் செய்யப்படுவதாகவும் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். கடைகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் தடைப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
ஜூலை 10 ஆம் திகதி நாடு வழமைக்கு திரும்பும் போது, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர்கள் தங்களது நம்பிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
