புகையிரத சேவை கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே நீண்டதூர புகையிரத சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சாதரண சேவைக்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதனை தொடர்ந்து விரைவில் புகையிரத சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுமென நம்பப்படுகிறது.
