எரிபொருள் வருவதில் தாமதம்?

இலங்கைக்கு முதற்கட்டமாக வருகை தரவுள்ள கப்பல்களில் தாமதம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(06.07) பாராளுமன்றத்தில் வைத்து இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். லங்கா ஐ.ஓ.சி இடமிருந்து வருகை தரும் கப்பல் 23 ஆம் திகதி வருகை தரும் என தெரிவித்துள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர 13 ஆம் திகதி வருகை தரவிருந்த எரிபொருள் கப்பலுக்கு மேலதிக பணம் செலுத்த வேண்டியுளளதாக அமைச்சரவையின் விசேட குழு தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஏற்பட்டுகள் செய்யப்பட்ட வருவதாகவும் 15 ஆம் திகதியளவில் கப்பல் ஒன்று வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பல இடங்களிலிருந்தும் பெற்றோல் கப்பல்கள் வருகை தருவதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்திருந்த போதும் தற்போது லங்கா ஐ.ஓ.சி இடமிருந்து வரும் ஒரு கப்பல் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கைக்கு எரிபொருள் கப்பல்களது வருகை தொடர்பில் அமைச்சர் ஏற்கவனே வெளியிட்டிருந்த தகவல் அடங்கிய செய்தி கீழுள்ளது.

எரிபொருள் வருவதில் தாமதம்?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version