வவுனியாவில் புத்தககடைகள் திறக்கலாம் என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன வி தமிழுக்கு உறுதி செய்துள்ளார்.
நேற்று முன்தினம் பொலிஸ் மா அதிபர் இலங்கையில் சகல புத்தக கடைகளும் திறக்க சுகாதர திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதியினை பெற்று அறிவித்திருந்தார். அந்த செய்தியினை வி தமிழ் வெளியிட்டிருந்தது.
வவுனியாவில் புத்தக கடைகளை திறக்க தங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என புத்தக நிலைய உரிமையாளர்கள் வி தமிழுக்கு நேற்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு சுகாதர துறையினை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கான அறிவித்தல் எதுவும் வரவில்லை எனவும் அதனால் புத்தக கடைகளை தம்மால் திறக்குமாறு கூற முடியாது எனவும் தெரிவித்தனர். சிலவேளை இன்றைய தினம் தமக்கான அறிவித்தல் வரலாம் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிற மாவட்ட புத்தக நிலையங்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சில கடைகள் நேற்று (23.09.2021) திறக்கப்பட்டுள்ளன. சில நேற்று முன் தினம் (23.09.2021) திறக்கப்பட்டுள்ளன என்பதனை அறிய முடிந்தது.
இந்த நிலையில் சற்று முன்னர் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, புத்தக நிலையங்களை திறப்பதற்கான அனுமதி தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும், புத்தக நிலையங்களை நாம்(பொலிஸ்) திறக்க அனுமதி வழங்கியுள்ளோம் என்பதனை உறுதி செய்தார்.
