வவுனியாவில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் விசேட நிலையம் ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
27 ஆம் திகதி முதல் 01 ஆம் திகதி வரை காலை 9.00 மணிமுதல் 1 மணிவரை இந்த விசேட நிலையம் திறந்திருக்கும்.
இந்த நிலையத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும். முதலாவது, இரண்டாவது ஊசிகளை இங்கே பெற்றுக் கொள்ள முடியும். இதுவரை ஊசிகளை பெற தவறியவர்கள் இங்கே உங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம்.
வவுனியா மாவட்டத்தின் சகலரும் இங்கே ஊசிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த விசேட நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள கிராமசேவையாளரிடம் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொண்டு வரவேண்டிய தேவையில்லை.
வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னமும் தடுப்பூசிகள் ஏற்றப்படாத நிலையில் இந்த நிலையத்தில் ஊசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
