இந்திய மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டி தொடரில் இந்திய மகளிர் அணி 3 – 0 என தொடரை வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவதும், இறுதியுமான இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றது. இதில் இந்தியா அணியின் தலைவி ஹர்மன்ப்ரீட் கோர் 75 ஓட்டங்களையும், பூஜா வஸ்டேர்கர் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரஷ்மி சில்வா, அணியின் தலைவி சாமரி அத்தபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது. இதில் நிலாக்ஷீ டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்களையும், மெக்னா சிங் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்தியா அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் ஹர்மன்ப்ரீட் கோர் தெரிவு செய்யப்பட்டார்.
வி.பிரவிக் (தரம் 04)
