கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் உதவி.

ஜனனம் அறக்கட்டளையின் ஊடாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதி வழங்கும் திட்டம். ஜனனம் அறக்கட்டளையினால் இன்று கொழுப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் நிலையினால் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் பின்னடைவுகளையும், துயரங்களையும் அனுபவித்து வருகிறார்கள். அதில் உச்சக்கட்டமாக இப்பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு நேர உணவினை கூட வழங்க முடியாமல் அந்த குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலைமையை கருத்தில் எடுத்த கலாநிதி வி ஜனகனின் திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டின் அடிப்படையில் பெண் தலைமைத்துவ குடுப்பங்களுக்கன உதவி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று வெள்ளவத்தை மயூராபதி பிரதேசத்தில் நூறு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் ஜனனம் அறக்கட்டளையின் உதவி.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version