நாளை (09.07) நடைபெறவுள்ள போராட்டங்களை அமைதியாக நடாத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். வன்முறைகள் பதிலல்ல எனவும், போராட்டங்களில் கலந்து கொள்கிறீர்கள் என்றால் அமைதியினை கடைபிடிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைதியாக போராட்டம் நடாத்துபவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் எனவும், அவர்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டுமெனவும் பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு அவர் மேலும் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
குழப்பமோ, பலமோ இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கலை தீர்க்காது எனவும், அரசியல் ஸ்திரத்தன்மையினை வழங்காது எனவும் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
![அமைதியான போராட்டத்துக்கு அமெரிக்க தூதுவர் அறிவுரை.](https://vmedianews.com/wp-content/uploads/2021/12/julie-chung-1024x683.jpg)