பிரச்சினைகளுக்கு தீர்வு – ஜனாதிபதியின் விசேட அறிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வெற்றிகரமான நல்ல நாடாக நாட்டை உயர்த்துவதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சகல நாடுகளிலும் கொரோனா காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. போதியளவு கையிருப்பு இல்லாமையினாலேயே இலங்கையில் தற்போதைய நிலை ஏற்பட்ட காரணம்.

நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண சகல காட்சிகளையும் கோரிய போதும் யாரும் முன் வராத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பை ஏற்று பிரதமர் பதவியினை ஏற்றுக் கொண்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனும், வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. வெளிநாடுகளது உதவிகள் மூலமாகவும், முதலீடுகள் மூலமாகவும் நாட்டை கட்டியெழுப்ப தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும்” வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, எரிபொருள், அத்தியாவசிய பொருட்களது விநியோகத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான, பொய்யான எதிர்க்கட்சிகளின் தகல்வல்கள் மூலமாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை என மக்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்வார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், நிதி திட்டமிடல் திட்டங்கள் அடுத்து வரும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நீண்ட மற்றும் நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமாக நாடு பலன்களை பெற ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன. 44,000 மெற்றிக் தொன் இரசாயன உரம் இந்தியாவிலிருந்து இந்திய கடனுதவி திட்டத்தின் மூலம் நாளை இலங்கைக்கு வரவுள்ளது. விவாசாய திட்டங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையினை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

22 ஆம் திருத்த சட்டத்திற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலமாக நாடு மீண்டும் வழமைக்கு திரும்பும் போது பொய் பிரச்சாரங்களை மேற்கொண்ட எதிர்கட்சிகளது வேலை திட்டங்கள் கலவலைக்கிடமாக மாறி விடும்.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு ஏற்ற நல்ல நாட்டை உருவாக்க வேண்டும். ஆகவே மக்கள் போலி பிரச்சாரங்களுக்குள் அகப்படாமல், நிலைமைகளை புரிந்து கொண்டு, புத்தி சாதுரியத்துடன் நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரியுள்ளதாக” ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பிரச்சினைகளுக்கு தீர்வு - ஜனாதிபதியின் விசேட அறிக்கை.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version