ஜூலை 09 போராட்டம் – ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் சென்றனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்ட காரர்கள் உள்நுளைந்துள்ளனர். மக்களின் வீடியோ காட்சிகள் மூலமாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர், முப்படையினர் பாரியளவிலான தடைகளை மக்கள் உள் நுழைவதற்கு பிரயோகிக்கவில்லை.

இவ்வாறன நிலையில் ஜனாதிபதி அங்கு இல்லையென சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் பல்லாயிர கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். காவல்துறையினரினால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் போராட்ட காரர்களினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளன.

முப்படையினர் மக்களுக்குள்ளும் கலந்துள்ள நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாள் உள்ள போர்த்துக்கீச மணிக்கூட்டு கோபுரத்துக்கு கீழே அமைந்துள்ள பாரிய கதவு மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்துள்ள போதும் தற்போது அதனை தகர்ப்பதற்கு மக்கள் முயற்ச்சித்து வருகின்றனர்.

காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகளும் தர்க்கப்பட்டுள்ளன. போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் முழுமையாக வந்து சேராத நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இன்னும் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜூலை 09 இன்று கொழும்பில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள்.

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கோட்டை சதாம் வீதி ஆகிய பகுதிகள் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொலிசாரினால் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகளை தகர்த்து ஜனாதிபதி மாளிகையினை நோக்கி நகர மக்கள் முயற்சிது வருகின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது பொலிசார் நீர் தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் நடைபெற்ற மோதல்களில் பொதுமக்கள் 5 பேரும், பொலிசார் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜீலை 09 போராட்டம் வவுனியாவில்.

வவுனியாவில் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.

இன்று நாடு பூராகவும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வவுனியாவில் போராட்டம் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வியாபார நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுவதாகவும், கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட பேரணி பழைய பேரூந்து நிலையத்தை நோக்கி செல்வதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 09 போராட்டம் - ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் சென்றனர்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version