பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டவர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட வீட்டின் மீதே தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் பிரதமரின் வீட்டின் முன்னாள் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு புகை தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு தடையினை உடைத்த போராட்ட காரர்கள் வீட்டினுள் நுழைந்துள்ளதோடு தீ மூட்டியுள்ளனர்.