ஜனாதிபதி பதவி விலக சம்மதம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
13 ஆம் திகதி காலையில் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகலை அறிவித்தலை தொடர்ந்து கொழும்பின் பல இடங்களில் பாட்டாசு சத்தங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஜனாதிபதி பதவி விலகலை அறிவித்தலை தொடர்ந்து கொழும்பின் பல இடங்களில் பாட்டாசு சத்தங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இலங்கை வரலாற்றில் தனது பதவியினை இராஜினாமா செய்யும் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபாதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாறவுள்ளார்.

சுமூகமான முறையில் தனது பதவியினையும், பொறுப்புக்களையும் கையளித்து செல்வதற்காக தனக்கு அவகாசம் தேவை எனவும், அதன் காரணமாக 13 ஆம் திகதி அவரை அவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகி தனது பொறுப்புகளை வழங்கி செல்ல அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமெனவும், பிரதர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்துள்ள நிலைமையில், அனைவரையும் அமைதி காக்குமாறும் கேட்டுக் கொள்வதாக ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலக சம்மதம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version