இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைமைகள் சீர் செய்யப்பட்டாள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதிய குழுவினர், இலங்கை ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலாக உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு சென்றனர்.
நேற்று(09.07) ஜனாதிபதி 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைந்ததும் தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நாட்டில் சீரான அரசியல் சூழ் நிலை ஒண்டு உருவானால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்குமென விற்பன்னர்கள் ஏற்கனவே தெரிவித்தும் இருந்தனர்.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கான பொருளாதர அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியுமென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.