நான்காவது அமைச்சர் பதவி விலகல்

விவாசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தான் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று இந்தியாவிலிருந்து வருகை தரும் இரசாயன உர தொகையினை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இவர், அண்மையில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் விவாசாய துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருது நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்தனை தொடர்ந்து இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் அறிவிப்பின் முன்னரே அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் அமைச்சர்கள் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் தமது பதவி விலகல்களை அறிவித்துள்ளனர்.

புதிய அரசாங்கம் அமைந்தன் பின்னர் தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நான்காவது அமைச்சர் பதவி விலகல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version