பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தில் மூவர் கைது

பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யபப்ட்டுளளதாக பொலிசார் தெரிததுள்ளனர்.

கல்கிசை பகுதியை சேர்ந்த 19 வயது நபர், மற்றும் கடவத்த, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை பொலிசார் தேடி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்குள் உள்நுழைந்த போராட்ட காரர்கள் பிரதமரின் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளனர்.

வீட்டின் பல பகுதிகள் தீயினால் சேதமாகியுள்ளன. தீ வைத்து நேரத்தில் அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்ததாகவும், ஏன் மின் தடை செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் பொது சேவைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தில் மூவர் கைது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version