இந்தியா எதிர் இங்கிலாந்து 20-20 இன்று.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான 20-20 இன்று நடவுபெறவுள்ளது. இந்தியா அணி நேற்று(09.07) பேர்மிங்ஹாம் இல் நடைபெற்ற இரண்டாவது 20-20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 46(29) ஓட்டங்களை பெற்றார். ரோஹித் ஷர்மா 31(20) ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரிஷாப் பான்ட் 26(15) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்களையும், ரிச்சர்ட் க்ளீசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றது. இதில் மோயின் அலி 35(21) ஓட்டங்களையும், டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 33(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும், யுஷ்வேந்திர சஹால், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாயகனாக புவனேஷ்வர் குமார் தெரிவு செய்யப்படடார்.

இந்தியா எதிர் இங்கிலாந்து 20-20 இன்று.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version