ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுதல் உறுதியாகியுள்ள நிலையில் பாராளுமன்றம் 15 ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக நேற்று(12.07) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியினை பாராளுமன்றம் தெரிவு செய்யும் எனவும், 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதிக்கான விண்ணப்பங்கள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கபப்ட்டு 20 ஆம் திகதி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகி மூன்று தினங்களில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவேண்டும். பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதிக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் வாக்களிப்பின் மூலமா ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும், தேர்தல் ஒன்றுக்கு அதன் பின்னரே செல்ல வேண்டும் என கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
