ஜனாதிபதி வெளியேற நிபந்தனையிட்டதாக வெளியான செய்தியினை பிரதமர் மறுத்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும், அவர் சார்ந்த சிலரும் வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தராவிட்டால் பதவி விலகமாட்டோன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக பகிரப்படும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல ஜனாதிபதி முயற்சித்த போதும் அது தோல்வியடைந்துள்ளதாகவும், அதன் பின்னர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து தராவிட்டால் தான் ஏற்கனவே கூறியது போன்று பதவி விலகமாட்டேன் என பிரதமருக்கு கூறியதாக தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்திய ஊடகங்கள் சிலவும் அவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான சூழ் நிலையில் பிரதமர் அலுவலகம் அதனை மறுத்துள்ளது.

இந்த நிலையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஜனாதிபதியினை வெளிநாடு செல்லவிடாமல் பணி புறகணிப்பு மேற்கொண்டதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என குடிவரவு, குடியகல்வு ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இன்னமும் பதவியில் உள்ள நிலையில், அவ்வாறு செய்ய முடியாது எனவும், அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை எனவும் குறித்த சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வெளியேற நிபந்தனையிட்டதாக வெளியான செய்தியினை பிரதமர் மறுத்தார்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version