பதட்டமடையும் கொழும்பு!

கொழும்பின் பல பகுதிகள் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டக்காரர்கள் தங்களது போராட்டங்களை ஆரம்பித்தனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்கல் நடாத்தப்பட்டுள்ளது.

கொழும்பின் பல இடங்களிலும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அலரி மாளிகை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரளுமன்றத்தை முற்றுகை இடுவதற்காக பாராளுமன்றம் நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே பிரதமர் பொலிஸ் மா அதிபருக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பதட்டமடையும் கொழும்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version