ஜனாதிபதி கோட்டாவுக்கு சர்வதேச பிடியாணை வழங்க கோரிக்கை

ஜனாதிபதி கோட்டபாயவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்க வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்றத்தில், ஜனநாயக லிபரல் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சேர் எட் டேவி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் மோசமான ஊழல்கள், வரி தளர்வு, வானம் தொட்ட பாதுகாப்பு செலவினங்கள், அதிகரித்த பொலிஸ் அதிகாரங்கள் போன்றவற்றினால் இலங்கையில் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக ஜனாதிபதிக்கும் அவரின் சகாக்களுக்கும் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வேண்டுமென தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, உலக நாடுகளோடு இந்த விடயம் தொடர்பில் பேசி, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வழங்கி ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைத்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார திட்டங்களுக்கு உடடனடியாக உதவுவதோடு, அரசியல் திட்டம் ஒன்றையும் முன் வைத்து அதனுள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை கைது செய்யும் திட்டத்தையும் உள்ளடக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த திட்டங்களை நடைமுறை செய்யும் போது, ஒவ்வொருவரது மனித உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதோடு, சிறுபான்மையினத்தினரான தமிழர் முஸ்லிம்கள் மக்களது உரிமைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாவுக்கு சர்வதேச பிடியாணை வழங்க கோரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version