இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் குழுவினர் இந்த தொடருக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முதற் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை அணி விபரம்
- திமுத் கருணாரட்ன – தலைவர்
- பத்தும் நிஸ்ஸங்க
- ஓஷத பெர்னாண்டோ
- அஞ்சலோ மத்யூஸ்
- குசல் மென்டிஸ்
- தனஞ்சய டி சில்வா
- கமிந்து மென்டிஸ்
- நிரோஷன் டிக்வெல்ல (வி.கா)
- தினேஷ் சந்திமால் (வி.கா)
- ரமேஷ் மென்டிஸ்
- மகேஷ் தீக்ஷனா
- கசுன் ராஜித
- விஷ்வ பெர்னாண்டோ
- அசித்த பெர்னாண்டோ
- தில்ஷான் மதுஷங்க
- பிரபாத் ஜெயசூரிய
- துனித் வெல்லாலகே
- ஜெஃப்ரி வண்டர்சே
