ஜனாதிபதியின் பதவி விலகல் அறிவிப்பு தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தினை மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்துள்ளார்.
அவரது கையொப்பத்தினை சபாநாயகர் உறுதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு மின்னஞ்சல் கடிதத்தின் உத்தியோகபூர்வ தன்மை தொடர்பிலும் சட்ட ஆலோசனை பெறப்பட்டு வருவதாகவும் மேலும் கூறப்படுகிறது. இருப்பினும் மூலப்பிரதி தேவைப்படுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளதாகவும், சிங்கப்பூரில் இருந்து உடனடியாக கடிதத்தை எடுத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.
சிங்கப்பூரில் இருந்து இராஜதந்திரி ஒருவர் கடிதத்தை எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் அறிய முடிகிறது. சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவரிடம் கடிதம் கையளிக்கப்பட்டு அவர் இராஜினாமா கடிதத்தை எடுத்து வரும் வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது.
நாளை(15.07) ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமா அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.
