பதவி விலகினார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ஷ பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கான உத்தியோகபூர்வ கடித்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் பதவியினை இராஜினாமா செய்வது இதுவே முதற் தடவையாகும்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஒன்பதாவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டவர் கோட்டபாய ராஜபக்ஷ. ஏழாவது நபராக பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதியாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல்களுக்கு முக்கியமான காரணம் இவரென குற்றம் சாட்டி மக்கள் இவரை பதவி விலக வேண்டுமென தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பல மாற்று திட்டங்களை செயற்படுத்தியும், அவை தோல்வியடைந்துள்ள நிலையில் பதவியினை இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மாளிகையினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதனை தொடர்ந்து அவர் ஜனாதிபதி மாளிகையினை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்த நிலையில், இன்று மாலத்தீவுகள் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்துள்ள நிலையில், பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்துவிட்டு சென்றுள்ளார்.

வெளிநாடு ஒன்றுக்கு சென்றதன் பின்னரே தனது பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பபடவேண்டுமென்ற காரணத்தினாலேயே இத்தனை நாட்களை அவர் எடுத்துக்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை விட்டு தான் வெளியேறியுள்ள நிலையில், ஜனாதிபதியாக தான் தொடர்ந்தும் செயற்படமுடியாத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டு நாட்டை விட்டு சென்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்விடையிடந்தவர். அவருடைய கட்சி பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே கொண்டுள்ளது. அவர் ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டவர். ஆகவே அவர் பதவியில் இருக்க முடியாதென போராட்ட காரர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி பதவி விலக முன்பே பிரதமரும் பதவி விலக வேண்டுமென இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகருக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பிரதமரை நியமிக்குமாறு அறிவித்துள்ளார்.

 

பதவி விலகினார் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version