இலங்கை மக்களோடு இந்தியா நிற்குமென தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை எப்போதும் வழங்க இந்தியா தயாராகவுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும் என்பதனையும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக வழிமுறையில், அரசியலமைப்பின் ஊடாகவும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப இலங்கையில் நிலையான ஆட்சி அமைக்க முனையும் மக்களின் பக்கம், தம் நாடு எப்போதும் ஆதரவாக செயற்படும் எனபதனையும் மேலும் உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலான அரசியில் சூழ்நிலையினை விரைவில் தீர்த்து, நாட்டின் தலைமைத்துவத்தை ஜனநாயக வழிமுறைகள் மற்றும் முக்கியத்துவத்தின் ஊடாக வழமைக்கு கொண்டுவர தாம் எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவாகர அமைச்சின் பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இலங்கை மக்களுக்கு தாம் சகல வழிகளிலும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அயல் நாடானா இந்தியா, இலங்கையின் முன்னேற்றத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், இலங்கை மக்களின் கஷ்டங்களில் இந்தியா பங்கெடுத்து வருவதாகவும், தெற்காசிய வலயத்தின் முன்னேற்றத்தில் இந்தியா பங்கெடுத்து வருவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை மக்களோடு இந்தியா நிற்குமென தெரிவிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version