சீனா 4 பில்லியன் டொலர் வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு நிலையில் சீனா இந்த தொகையினை வழங்குமென மேலும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் ஒரு பில்லியன் டொலர் கடன் சீனாவுக்கு வழங்கவேண்டும். அதேயளவு தொகையினை இலங்கை கடனாக கோரியுள்ளது. 1.5 பில்லியன் டொலர் கடனுதவி திட்டத்தை சீன இறக்குமதிகளுக்காகவும், 1.5 பில்லியன் பண பரிமாற்ற கடனையும் இலங்கை கோரியுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை தேவையின்றி கடன் கேட்கவில்லை. காரணத்துடனேயே கடன் கேட்கிறோம். மற்றைய கடன் வழங்குநர்களிடம் கேட்பதனையே சீனாவிடம் கேட்கிறோம். இலங்கைக்கு பணம் கிடைத்தாலே மீண்டு வர முடியும். ஆகவே சீனா ஒரு தருணத்தில் நிச்சயம் கடன் வழங்க சம்மதம் தெரிவிக்கும் என நம்பிக்கை பாலித்த கொஹன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனா 4 பில்லியன் டொலர் வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version