இலங்கையின் அதிகரித்த கடன் மட்டங்களும், குறைவான கொள்கை திட்டங்களும், சர்வரதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையும் இலங்கைக்கு எச்சரிக்கை சமிக்ஞையினை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகைமாத்துவ பணிப்பாளர் க்ரிஸ்டிலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளின் G 20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுடனான கூட்டத்தில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
“யுக்ரைன் மீதான போர் காரணமாக பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை அதன் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. உலக பொருளதார நிலைமைகள் மேலும் இறுக்கமடைந்துள்ளன. தொடர்நது கொண்டிருக்கும் கோரோனோ சூழ்நிலை உலக விநியோக சங்கிலியின் கழுத்தை பிடித்துள்ளன.
இவற்றின் விளைவாக 2022 – 2023 ஆண்டுக்கான உலக பொருளாதர வளர்ச்சியின் மதிப்பீட்டினை சர்வதேச நாணய நிதியம் குறைக்கவுள்ளது. அத்தோடு பொருளாதர அபாயம் மேலும் அதிகரிக்கும் அதேவேளை, ஆழமாகவும் செல்லவுள்ளது. பணவீக்கம் மேலும் அதிகரிக்கவுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இறுக்கமான பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலமாகவே மேலும் பொருளாதர வீழ்ச்சி ஏற்படாமல் பாதுக்காக்க முடியும். அதிக கடன்களுடன் குறைந்த திட்டமிடல்களுடன் உள்ள நாடுகள் மேலும் கடுமையான நிலையினை எதிர்கொள்ளவுள்ளன. இலங்கைக்கான எச்சரிக்கை சமிக்ஞையாக மட்டுமே இதனை பார்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தியடைந்த நாடுகளும், அபிவிரித்தியடைந்து வரும் நாடுகளும் கடந்த நான்கு மாதங்களாக கையிருப்பு வெளியேற்றங்களை அனுபவித்து வருகின்றனர். தொடரும் காலங்களில் அது மேலும் அதிகரிக்கும் நிலைப்பாடும் உருவாகியுள்ளது. கடந்த 3 தசாப்த காலங்களில் மோசமான பொருளாதார வீழ்ச்சியினையும், பின்னடைவையும் சந்தித்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் முகைமாத்துவ பணிப்பாளர் க்ரிஸ்டிலினா ஜோர்ஜிவா குறித்த கூட்டத்தில் தெரிவித்துலாளர்.
