ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுள்ளார். சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன ஆகியோர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை 10.15 அளவில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பாரளுமன்ற உறுப்பினர்கள், முப்படை தளபதிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு நனவாகியதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version