இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவு

(காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதிலிருந்து)

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முதலாம் இன்னிங்ஸ், மதியபோசனத்துக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது.

இலங்கை அணி பெற்றுள்ள 378 ஓட்டங்கள் இந்த மைதானத்தில் சிறந்த ஓட்ட எண்ணிக்கை. இன்று காலை இலங்கை அணி ஓட்டங்களை பெற்ற போதும், பின்வரிசை விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 103 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது, சிறப்பான ஆரம்பம் ஒன்றை இலங்கை அணி பெற்ற போதும், அடுத்தடுத்த மூன்று விக்கெட்களை இழந்தமையினால் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி மீண்டு வந்த நிலையில் மத்தியூஸ் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்காக தொடர்ந்தும் ஓட்டங்களை பெற்று வரும் டினேஷ் சந்திமால் தொடர்ச்சியான ஐந்தாவது 50 இற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையினை பெற்று ஆட்டமிழந்தார். சந்திமால், தனஞ்சய டி சில்வா ஆகியோரது இணைப்பாட்டம் மீண்டும் இலங்கை அணியினை நம்பிக்கையான நிலைக்கு உயர்த்தியது. இறுதி நேரத்தில் நிரோஷன் டிக்வெல்ல பெற்றுக் கொண்ட ஓட்ட எண்ணிக்கை இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட ஆரம்பத்தில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவரும் திமுத் கருணாரட்னவும் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை இலங்கை அணி இழந்த தடுமாறியது. மதிய போசனத்துக்கு பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பித்த வேளையில் தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இணைப்பாட்டம் கட்டியெழுப்பப்படட்டு நகர்ந்து செல்லும் வேளையில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி சார்பாக யசீர் ஷா, நஸீம் ஷா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியில் இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்து விளையாடுகின்றன. பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷதபெர்னாண்டோபிடி-  மொஹமட்ரிஸ்வான்மொஹமட்  நவாஸ்507043
2திமுத்கருணாரட்ணபிடி-  நசீம்ஷாயாசிர்ஷா409030
3குசல்மென்டிஸ்Run Out31000
4அஞ்சலோமத்யூஸ்பிடி –   மொஹமட்ரிஸ்வான்நௌமன்அலி4210650
5தினேஷ்சந்திமல்பிடி -பவாட்அலாம்மொஹமட்  நவாஸ்8013792
6தனஞ்சயடிசில்வாBowledநசீம்ஷா 336031
7நிரோஷன்டிக்வெல்லபிடி-  மொஹமட்ரிஸ்வான்நசீம்ஷா515461
8டுனித்வெல்லாலகேபிடி –  பாபர்அஸாம்நசீம்ஷா 112020
9ரமேஷ்மென்டிஸ்Bowledயாசிர்ஷா355241
10பிரபாத்ஜயசூரியL.B.Wயாசிர்ஷா81700
11அசித்தபெர்னாண்டோ  41310
 உதிரிகள்  21   
 ஓவர்103விக்கெட் – 103மொத்தம்378   
       

பந்துவீச்சாளர்ஓவர்ஓ.ஓவி
ஹசன்அலி173590
நசீம்ஷா 183583
நௌமன்அலி212641
அஹாசல்மான்60250
மொஹமட்  நவாஸ்193802
யாசிர்ஷா222833
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version