இலங்கையை பிரித்தானியா அவதானிக்கிறது!

பிரித்தானியா, இலங்கையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருவதாக பிரித்தானிய பாரளுமன்றத்தில் வெளிநாடு, பொதுவானலவாய நாடுகள் மற்றும் அபிவி விருத்திகளுக்கான அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

சகல தரப்பினரையும் அமைதி காக்குமாறும், சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், வன்முறைகளில் ஈடுபடவேண்டாமெனவும் கோருவதாக அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கையில் வேகமாக நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பிலும், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் அக்கறை செலுத்தி அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதானிய மனிதாபிமான உதவிகளை உலக வங்கி அடங்கலான நிறுவனங்களிளினூடாக வழங்கி வருவதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

சமாதானமாகவும், ஜனநாயக அடிப்படையிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல் நிலைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் பிரித்தானிய அரசாங்கம் கோரிக்கை முன் வைப்பதாக மேலும் அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் சிக்கல் நிலைகளை தீர்ப்பதற்கான தீர்க்கமான முடிவினை சர்வதேச நாடுகள் எடுக்க வேண்டுமென அவர்களுக்கும் கோரிக்கை விடுப்பதோடு, பரிஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமும், உலக வங்கியிடமும் இது தொடர்பிலான செயற்திட்டங்களுக்கு கோரிக்கை முன் வைத்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கும் அதன் முகவர் நிறுவனங்களுக்கும் தாம் இலங்கைக்கான உதவி திட்டங்கள் தொடர்பில் கைகொடுப்பதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். அத்தோடு 47.2 மில்லியன் டொலர்களை அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் வழங்கியுள்ளதாக பிரித்தானிய பாரளுமன்றத்தில் வெளிநாடு, பொதுவானலவாய நாடுகள் மற்றும் அபிவிருத்திகளுக்கான அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிரித்தானியா அவதானிக்கிறது!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version