தேசிய அரசாங்கம் இந்த வாரம்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முடிவுக்கு வரலாம் எனவும், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது தொடர்பில் பல கட்சிகள் அக்கறை காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி தான் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்க மாட்டோம் என கூறி வரும் நிலையில், அதன் பங்காளி கட்சிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுக்கலாமென நம்பப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுந்தந்திர கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் தனது விருப்பத்தை ஜனாதிபதிக்கு வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி நேற்று 28 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 03 ஆம் திகதி காலை 10.30 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பு செய்துள்ளார். அத்தோடு பாராளுமன்ற தெரிவுக்குழுக்களும் தானாகவே இரத்தாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

தேசிய அரசாங்கம் இந்த வாரம்.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version