வரும் வாரம் பாடசலைகள் மூன்று தினங்களுக்கே நடாத்தப்படவுள்ளன. இந்த வாரம் போலல்லாமல் திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை பாடசாலை நடைபெறவுள்ளது.
வியாழக்கிழமை பௌர்ணமி தினம் என்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் வீட்டிலிருந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடு நடைபெறவும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது
எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எரிபொருள் சிக்கலை எதிர்கொளவதினால் கடந்த பல நாட்களாக வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே பாடசாலை நடைபெற்று வருகிறது.
வடமாகாணத்தில் விடுமுறை தினம் தவிர்ந்த மற்றைய நான்கு நாட்களும் பாடசலை நடைபெறுமான வடமாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
