ராகுல், பிரியங்கா காந்தி சகோதரர்கள் கைது!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையை போன்ற விடயங்களை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற பாரளுமன்ற உறுப்பினர்களான ராகுல் காந்தி, சசி தரூர் உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பேரணியாக செல்ல முயன்ற பிரியங்கா காந்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்றில் மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த காலங்களில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இதனால் கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடாத்த திட்டமிட்ட வேளையில் பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கை கருத்திற் கொண்டு புது டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியமையால் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல், பிரியங்கா காந்தி சகோதரர்கள் கைது!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version