அலி சப்ரி – ஜெய்ஷங்கர் சந்திப்பு!

இலங்கையின் நம்பிக்கையான நட்பு நாடான இந்தியா எப்போதும் இலங்கைக்கு கைகொடுக்குமெனவும், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஈடுபாட்டுடன் செயற்படுமெனவும் இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் இந்தியா வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கம்போடியா தலைநகரில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் இரு வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொண்ட போது நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விடயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியுடன் தனது முதல் சந்திப்பு நடைபெற்றதாகவும், தான் அவரது புதிய பொறுப்புக்கு வாழ்த்து கூறியதாகவும், இலங்கைக்கான உதவிகளை இந்தியா வழங்குமென உறுதி வழங்கியதாகவும் கலாநிதி ஜெய்ஷ்ங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி - ஜெய்ஷங்கர் சந்திப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version