இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி சிங்கப்பூருக்கு பயணித்த கோட்டாபய ராஜபக்ஷவினது விசா ஓகஸ்ட் 11 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் விண்ணப்பத்தினை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் இம்மாத கடைசி வாரம் வரை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார்கள்.