பிரித்தானியாவின் சுற்றுலா பயணியான கேலிஜ் பிரெஷர் இன் சுற்றுலா விசாவினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நேற்று இரத்து செய்து அறிவித்திருந்தது. அத்தோடு இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் அந்த அறிவிப்புக்கு எதிராக ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் குறித்த மனுவில் பிரதிவாதியாக உள்ளடக்கப்பட்டுள்ளார். கேலிஜ் பிரெஷர் காலி முகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என தெரிவித்து அவரது விசாவினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இரத்து செய்தமை, தன்னிச்சையான செயற்பாடென அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.