முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கான விண்ணப்ப கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்தமைக்கான குற்றத்துக்காக ரஞ்சன் ராமநாயக்க சிறைத்தண்டனை பெற்று அதனை அனுபவித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் அவருக்கான பொது மன்னிப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கறிஞரினால் தயாரிக்கப்பட்ட பொது மன்னிப்புக்கான விண்ணப்ப கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்த கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளிக்கப்படவுள்ளது.