சர்வதேச ரீதியில், அல்லது இலங்கைக்கு வெளியே இயங்கும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்களது தடைகளை இலங்கை அரசாங்கம் நீக்கி அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இயங்கி வரும் உலக தமிழர் பேரவை, பிரித்தானியிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை ஆகிய தமிழ் அமைப்புகளது தடைகள் நீக்கப்பட்டுள்ள அதேவேளை உலக தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தமிழ், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் உள்ளடங்கிய பெயர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.