புதுகுடியிருப்பில் 1590 லீற்றர் எரிபொருள் மீட்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 1590 லீற்றர் எரிபொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் உள்ள குறித்த வீடொன்றில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் அந்த வீட்டிலிருந்து 1590 லீற்றர் எரிபொருளை மீட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு பொலிசார் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version