வினைத்திறனான அரச சேவைக்கு நாமலின் யோசனை

இலங்கையின் அரச சேவையை வினைத்திறன் மிக்கதாக உருவாக்குவதற்கான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றினை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பியுள்ளார்.

பொதுத் துறையில் கள உத்தியோகத்தர்களாகப் பணிபுரிபவர்கள் வாரத்தில் 5 நாட்களும் அவர்களின் நிரந்தர பணியிடங்களில் வேலை செய்யவதிலும் பார்க்க 2 அல்லது 3 நாட்கள் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வேலை செய்வதற்குப் அனுமதித்தால் அதிக ஆக்கப்பூர்வமாக வேலை செய்ய முடியும் என அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்கள் அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டால் அதன் மூலம் அதிக வினைத்திறன் மிக்க பொது சேவையை வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version