வவுனியா, கற்பகபுரம் கல்வி பேரவையின் கிரிக்கெட் தொடர்

வவுனியா கற்பகபுரதில் செயற்பட்டுவரும் கல்வி பேரவை எனும் அமைப்பினால் வறிய மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவும் நோக்குடன் நிதி சேகரிக்கும் முகமாக அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர் மட்டுப்படுத்தபட்ட மென்பந்து சுற்றுபோட்டி இன்றைய தினம் கற்பகபுரம் அ. த. க பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. இவ் ஆரம்பம் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக பிரதேச செயலாளர், பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பம்பபைபமடு கிராம அலுவலர், பாடசாலை அதிபர், அயல் பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

இக்கல்வி பேரவையானது வறிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் முகமாக உருவாக்கப்படட ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பின் மூலம் பாடசாலை இடைவிலகலை குறைப்பதும், கல்வி பயல நிதி நிலையில் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவி செய்வதும், நல் ஒழுக்கமுள்ள எதிகால சமூகத்தை உருவாக்குவதாகும். மேலும் இவ்வமைப்பிற்கு கொடையாளிகளை எதிர்பாக்கும் அதேவேளை தங்கள் பகுதியில் கல்வி பயில இன்னமும் மாணவர்களை இனம் கான விளையாட்டு கழக வீரர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உதவி புரிய வேண்டும் என கல்வி பேரவையின் ஸ்தாபகர் வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியா, கற்பகபுரம் கல்வி பேரவையின் கிரிக்கெட் தொடர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version