ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அழைப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். சிவப்பு, நீலம், பச்சை, சாம்பல் ஆகிய நிறங்களின் பெயர்களில் அணிகள் விளையாடின. உலக 20-20 தொடருக்கு இலங்கை அணியினை தயார் செய்யும் முகமாக இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் சுற்றில் நான்கு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் மற்றைய அணிகளுடன் மோதி கூடிய புள்ளிகளை பெற்ற அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின. இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள சிவப்பு மற்றும் நீலம் ஆகிய அணிகள் தலா இவ்விரு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version