கோட்டபாயவின் செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்கும் – அமைச்சர் பந்துல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்துக்கு தனியார் விமானத்தில் பயணித்த கட்டணத்தை இலங்கை அரசாங்கம் செலுத்துமென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்குமுள்ள வரப்பிரசாதம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் உண்டென கூறிய அமைச்சர் பந்துல, முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச போன்றவர்கள் இது போன்று வரப்பிரசாதங்களை கடந்த காலங்களில் அனுபவித்துள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு ஜனாதிபதி சட்டத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவருடைய செல்வுகளை அரசாங்கம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டி காட்டியுள்ளார்.

வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொன்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சகல வரப்பிரசாதங்களும், சலுகைகளும் அவருக்கு வழங்கப்படுமென மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version