அவசரகால சட்டம் நீடிக்காது – ஜனாதிபதி

நாட்டின் நிலைமைகள் சீராகி வருவதனால் நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால சட்டம் நீடிக்கப்படாதென நேற்று (16.08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் இந்த வாரத்துடன் காலவதியாகும் நிலையில் அவசரகால சட்டம் நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணத்துவ சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமான நிலையில் காணப்படுவதனால் அவசரகால சட்டம் தேவையில்லை என மேலும் அவர் கூறியுள்ளார்.

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான மதிப்பீடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த அனைவரது பங்களிப்பும் அவசியம் என தெரிவித்த ஜனாதிபதி, டயஸ்பொறா அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டுமெனவும் அதன் மூலமாக இலங்கைக்கு உதவிகளை பெற முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version