இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்துக்கு காற்றலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை அமைப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசகதி, மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவிதத்துள்ளார்.
மிசாரசபை ஊழியர்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி சபை ஊழியர்களுடன் இந்த விடயம் தொடர்பிலான கூட்டமொன்று நேற்று(16.08) நடைபெற்றுள்ளது. இந்த விடயத்தை அங்கு தெரிவித்த அமைச்சர் இது தொடர்பான மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
46 விண்ணப்பங்களில் 21 விண்ணப்பங்கள் இலங்கை மினாசார சட்டம் திருத்தும் காரணமாக அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் வரும் வாரம் அவற்றுக்கான தற்காலிக அனுமதிக்கான ஒப்பந்தம் வழங்கப்படுமெனவும் வலுசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
அதானி குழுமத்துக்கு மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் நிலையம் மூலம் 286 மெகாவொட்ஸ் மின் உற்பத்தியும், பூநகரி நிலையம் மூலம் 234 மெகா வொட்ஸ் மின் உற்பத்தியும் மேற்கொள்ளப்படுமெனவும், இவற்றுக்கான முதலீடு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.