முன்னாள் பிரதியமைச்சர் ரூபவாஹினிக்குள் புகுந்தமைக்காக கைது.
முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரினால் இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு அவர் பிரதி அமைச்சராக இருந்த வேளையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கள் சென்ற குற்றச்சாட்டினை விசாரணை செய்ய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ரூபவாஹினிக்குள் சென்ற அவர் அப்பொதைய செய்தி பணிப்பளாரை அச்சுறுத்தியதாக மேர்வின் சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.